×

சுதந்திர போராட்ட வீரர்களின் சிலைகள் இடம்பெற்ற அலங்கார ஊர்தி

செங்கல்பட்டு: டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவில், தமிழகம் சார்பில், வீரமங்கை வேலுநாச்சியார், மகாகவி பாரதியார், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் உள்பட பல தலைவர்களின் சிலைகள் இடம்பெற்ற அலங்கார ஊர்தி உருவாக்கப்பட்டது. ஆனால், உலக நாடுகளுக்கு அவர்களை தெரியாது எனக்கூறி, மத்திய அரசு, அந்த ஊர்தியை பங்கேற்க தடை விதித்தது. இந்நிலையில், இந்திய சுதந்திரத்துக்காக போராடி உயிரை மாய்த்து கொண்ட சுதந்திர போராட்ட   தலைவர்களின் உருவச்சிலைகள் அடங்கிய ஊர்தி தமிழகம் முழுவதும் சென்று வரும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதைத்தொடர்ந்து, நேற்று முதல் அந்த ஊர்தி ஊர்வலமாக  செல்ல தொடங்கியது. இந்நிகழ்ச்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த ஊர்தி இரண்டு பிரிவாக பிரிந்து அனுப்பப்படுகிறது. முதல் ஊர்தியில், வீரமங்கை வேலுநாச்சியார், மகாகவி பாரதியார் ஆகியோர் சிலையும், மற்றொரு ஊர்தியில், வ.உ.சிதம்பரனார் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் அழகிய சிலைகள் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஊர்திகள் சென்னை அடுத்த  செங்கல்பட்டு நுழைவாயில் பரனூர் சுங்கசாவடியை கடக்கும்போது, அவ்வாகனங்களை செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் வரவேற்று,வழியனுப்பி வைத்தார்.  …

The post சுதந்திர போராட்ட வீரர்களின் சிலைகள் இடம்பெற்ற அலங்கார ஊர்தி appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Tamil ,Nadu ,Veeramangai Velunachiar ,Mahakavi Bharatiyar ,V.U. Chidambaran ,Tamil Nadu ,Republic Day ,Delhi ,
× RELATED செங்கல்பட்டு பகுதியில் மிதமான மழை: விவசாயிகள் மகிழ்ச்சி